வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரண்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு முன்மொழிவில் சட்டப்பூர்வ பணம் செலுத்தும் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவை அறிமுகப்படுத்தியுள்ளது.புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பும் பணத்தில் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை

அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விமான நிலையத்தில் அமெரிக்க டொலரில் பணம் செலுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் உரிமம் வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *