திடீர் என உயிரிழந்த இரு இளைஞர்கள் – மட்டக்களப்பில் பெரும் சோகம்
மட்டக்களப்பு மாவட்டம் – களுதாவளை பகுதியில் நேற்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குணசேகரம் ரோஜிதன் என்ற இளைஞன் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிகுடி இலங்கை வாங்கி உத்தியோகத்தரான துசாந்தன் என்ற இளைஞன் திடீர் சுகயீனம் ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.