இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி – 15 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வெலிமடை – கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.