முல்லைத்தீவு பகுதியில் தாயின் 2 ஆவது கணவனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்


முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 அகவை சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்பம் தரித்த நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் 13.11.23 அன்று முல்லைத்தீவு பொலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை உடந்தையாக இருந்த தாயார்,
மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் பாமசி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்க உட்படுத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *