அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது.
மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய தினம் இரண்டாம் நாளாக வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
பணிப்புறக்கணிப்பின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஊவா மாகாணத்தில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் இருந்து வெளியேறும் வைத்தியர்களை தக்கவைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக தெரிவித்தனர்.
Related Post

இளைஞனை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்
கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிர்பிழைத்த [...]

யூடியூப், பேஸ்புக் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் [...]

பல்கலைக்கழகத்தில் தாக்குதல்- மாணவி உட்பட இருவர் காயம்
சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய [...]