கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தடைச் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.