சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம் – முழு விபரம்

இன்று முதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒடோ டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சூப்பர் டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

முல்லைத்தீவில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரின் திருவிளையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட வீடு ஒன்றில் அதிகளவான எரிபொருளை பதுக்கி [...]

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் [...]

யாழ் நெல்லியடியில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி
நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் [...]