14 இந்திய மீனவர்கள் கைது

யாழ் கடல் எல்லைக்குள் இன்று (29) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்
நாளை மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை [...]

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று [...]

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – 20 பேர் பலி, 300 பேர் காயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட [...]