மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (16) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.
திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றது.
இன்று (17 ) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.
Related Post

கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட இணக்கப்பாட்டுக்கு வர மறுத்தால் [...]

பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதியில் தங்கி இருந்த மாணவ மாணவிகள்
பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது [...]

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 06, [...]