Day: October 29, 2023

யாழ் பண்ணைப் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த முச்சக்கரவண்டியாழ் பண்ணைப் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்கு அருகில் பாய்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முச்சக்கரவண்டியில் சாரதி [...]

போதையில் தனது வீட்டுக்கு தீ வைத்து எரித்த இளைஞன்போதையில் தனது வீட்டுக்கு தீ வைத்து எரித்த இளைஞன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டட போது எதிர்வரும் 3ம் [...]

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை – இராணுவத்தில் பணியாற்றும் நபர் கைதுபுதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை – இராணுவத்தில் பணியாற்றும் நபர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொலை சம்பவத்தினை செய்த மயில்குஞ்சன் [...]

14 இந்திய மீனவர்கள் கைது14 இந்திய மீனவர்கள் கைது

யாழ் கடல் எல்லைக்குள் இன்று (29) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். [...]

அறுவை சிகிச்சை மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடுஅறுவை சிகிச்சை மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடு

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் [...]

நாளை முதல் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்நாளை முதல் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. நாளை (30) நண்பகல் 12 மணிக்கு [...]

இன்றைய வானிலை – மாலை இடியுடன் கூடிய மழைஇன்றைய வானிலை – மாலை இடியுடன் கூடிய மழை

இன்று (29) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என [...]