யாழ் ஈவினை கிழக்கில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ் ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன் லோகநாதன் (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தவேளை, இன்னொருவர் அதனை கழுவுவதற்காக நீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். இதன்போது திடீரென நீருடன் மின்சாரமும் இணைந்து பாய்ச்சப்பட்டதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.