ஆட்கடத்தலில் ஈடுபட்ட 14 இலங்கையர்களுக்குப் பிரான்சில் சிறைத்தண்டனை


ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கியதற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பாரிஸுக்கு வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் பகுதியில் இருந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படும் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து உக்ரைனில் இருந்து கண்டம் முழுவதும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நகர்த்துவதற்கான வழிகளையும், அவர்களுக்கான கட்டணங்களையும் அவர் நிர்ணயித்ததாக புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மற்றொரு சந்தேகநபருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மற்றவர்களுக்கு குறுகிய கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரிட்டனை அடையலாம் என்ற நம்பிக்கையில், அண்மைய ஆண்டுகளில் ஐரோப்பாவை நோக்கி குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டில் 45,000 க்கும் மேற்பட்டவர்கள், ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இது முந்தைய ஆண்டில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட 17,000 என்ற எண்ணிக்கையை விஞ்சியது என்று இங்கிலாந்து அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *