சிங்கப்பூர் சென்ற யாழ் மாணவிக்கு கெளரவம்
சிறுவர் தலைமையிலான பரிந்துரைத்தல் மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பு எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக வேள்ட் விஷன் நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டு தென்னாசியா மற்றும் பசுபிக் கண்ட நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிக்கு கௌரவிப்பு நடைபெற்றது.
ஏஞ்சல் சர்வதேச பாடசாலையில் தரம் பத்தில் கல்வி பயிலும் ஜெயசீலன் குஜிதா என்ற மாணவியே நேற்று முன்தினம் (03) சங்கானை கலாச்சார மண்டபத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து மூவர் தெரிவாகியிருந்த நிலையில் தமிழர் தரப்பில் இருந்து குஜிதா மாத்திரமே தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.