கிளிநொச்சியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி


கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண் குழந்தை எனவும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *