மீண்டும் பாடசாலைக்குச் சென்ற வைசாலி
அண்மையில் யாழ் போதான வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்தவேளை கை அகற்றப்பட்ட குறிப்பிட்ட மாணவி தொடர்பில் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இன்றைய தினம் யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு கற்றல் நடவடிக்கைக்கு மீண்டும் சென்ற வேளை, குறித்த மாணவி வைசாலிக்கு சக மாணவர்கள் பூங்கொத்துக் குடுத்து வரவேற்றுச் சென்றனர்.
கையை இழந்து சென்ற சிறுமிக்கு எதிர்காலம் தொடர்பில் இது உண்மையில் மிகப் பெரும் நம்பிக்கையாகவே அமைந்திருக்கிறது.
இது தொடர்பில் ஒழுங்கமைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.