மர்ம நபருடன் தங்கிய பெண் மரணம்
தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
நேற்று (14) பிற்பகல் கிரிதர சந்தி பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிதர சந்திக்கு அருகில் கடையொன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி இரவு தங்குவதற்காக நண்பர் மற்றும் நண்பருடன் வந்த பெண்ணொருவருக்கு கடையை கொடுத்துள்ளார்.
மறுநாள் கடையில் தங்கியிருந்த பெண் கடையிலேயே இறந்து கிடந்தது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பெண்ணுடன் வந்த நபர் சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.