மொராக்கோவில் சத்திவாய்ந்த நிலநடுக்கம் – 600ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 632 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 296 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
Related Post

தபால் ஊழியர் மீது தாக்குதல் – 45 வயது நபர் கைது
வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய [...]

நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 வது அமர்வில் விடயம் 8 இன் [...]

இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்
சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான [...]