இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்
சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான பெற்ரோல் 92 தரம் என கூறப்பட்டு விநியோகிக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இதன்படி சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் குறைந்த தரத்திலான (ஒக்டேன் 80-85) பெற்றோல் சுத்திகரிக்கப்பட்டு ஒக்டேன் 92 தரத்தின் கீழ் விநியோகிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தலா 2,400 மெட்ரிக் தொன் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய செயற்பாட்டு முகாமையாளர் ஹரீந்திர கோதாகொட, இந்த சுத்திகரிப்பு நிலையம் குறைந்த தரம் 80-85 ஒக்டேன் பெற்றோலை சுத்திகரித்து சேமித்து வைப்பதாக தெரிவித்தார்.
குறைந்த தர பெற்றோல் இருப்புக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டபோது, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அவற்றை ஒக்டேன் 92 தரத்திற்கு மேம்படுத்தி உள்ளூர் சந்தைக்கு வழங்கும் என தெரிவித்த்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , மேம்படுத்தும் செயல்முறை பொதுவாக குறைந்த தர பெட்ரோலுடன் டீசலின் ஒ க்டேன் அளவை உயர்த்துவதை உள்ளடக்கியது.
இதேவேளை, தரம் குறைந்த எரிபொருள் சந்தைக்கு வெளியிடப்படுவதாக சாரதிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினால் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து,
பல எரிபொருள் மாதிரிகள் தரத்திற்காக உள்ளூர் ஆய்வகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.