நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும்


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 வது அமர்வில் விடயம் 8 இன் பொது விவாதத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே!,
வியன்ன பிரகடன மும் அதன் செயல் முறைகளும் தொடர்பாக 27வது பத்தி கூறுகிறது,

“நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும், மேலும் சர்வதேச சமூகத்தால் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளின் அதிகரித்த அளவு வழங்கப்பட வேண்டும்.”

எவ்வாறாயினும், கடந்த வாரம் இலங்கையில் தமிழ் நீதிபதி திரு. ரி. சரவணராஜா, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக” தனது அனைத்து உத்தியோகபூர்வ பணிகளையும் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

சிங்கள பெரும்பான்மையினருக்குள் உள்ள பௌத்த தீவிர போக்குக் கொண்ட மதவாத, இனவாத சக்திகளை எரிச்சலூட்டுவதாக கூறி அவர் பிறப்பித்த உத்தர வை மாற்றுமாறு நாட்டின் சட்டமா அதிபரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தமும் இதில் அடங்கும்.

போர்க்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அரசாங்க எம்.பி ஒருவர், உயரிய சபையில் அடிக்கடி
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழ் நீதிபதி தனது இடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து, பாராளுமன்றத்தில் மேற்படி நீதிபதியை வெளிப்படையாவே மிரட்டினார்.
அதே பாராளுமன்ற உறுப்பினர் தேசிய பாதுகாப்பு துறை தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட எனது சக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அரசாங்க ஆதரவு குண்டர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.

இது நடைபெற்ற போது பொலிசார் அங்கு பார்த்துக் கொண்டிருந்தனர். பொலிசார் நடவடிக்கை எடுக் காமல் இருந்த நிலையில், பின்னர் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இறுதியில் 6 பேரைக் கைது செய்து, அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றத்திற்கு சென்று “இனக் கலவரங்களை” தடு ப்பதற்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று காரணம் காட்டி விடுவித்திருந்தனர்.

சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *