நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 08:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அங்கு 60.05 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.