யாழ் மடத்தடி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
யாழ் பிரதானவீதி மடத்தடிப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாகனம் ஒன்றை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதகவும் கூறப்படுகின்றது.