நாங்கள் வாய் துறந்தால் சாணக்கியன் தெருவில் நிற்பார்
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய் துறந்தால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த. சிவானந்தராஜா தெரிவித்தார்.
நேற்று (10) மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சாணக்கியன் தனது வேட்டியை ஒவ்வொரு இடமாக வீசி தற்போது சூறை முள்பத்தையில் வீசியுள்ளதாகவும் அதன் தாக்கம் இனி அவருக்கு தெரிய வரும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
போராட்டத்தைப் பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவர் தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அமைப்பாளர் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவர்களுடன் ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
அந்த நேரத்தில் பல கோரிக்கைகளை முன் வைத்ததாகவும் எந்த ஒரு நடவடிக்கையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் செய்யவில்லை எனவும் அவ்வாறு இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயம் தேவையா என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார்.
அவருக்குத் தெரியவில்லை என நினைக்கின்றேன் நான் 1991 ஆம் ஆண்டு இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வடகிழக்கு மலையகம் தொட்டு புத்தளம் வரை அதன் காரியாலயங்களை நிறுவி அதன் சேவைகளை செய்து கொண்டு வருகின்றது.
அந்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குழந்தையும் இல்லை என நான் நினைக்கின்றேன் அவருக்கு அந்த சந்தர்ப்பங்கள் தெரிவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினை பற்றி கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. காரணம் என்னவெனில் அவருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லாதவர்.
கொழும்பில் படித்து வெளிநாடுகளில் படிப்பை முடித்து விட்டு பாதுகாப்பை தேடிக் கொண்டிருந்தவர். எல்லாம் முடிந்த பின்பு இன்று இலங்கைக்கு வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதியில் அமைப்பாளராக இருந்து செயல்பட்டு கொண்டிருந்தவர்.
பாராளுமன்ற உறுப்பினராக செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலே இணைந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அவ்வாறு இருந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற பதவியை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு அவருக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார் என்பதனை அவர் யோசிக்க வேண்டும்.
எடுத்தவுடன் ஊழல்வாதிகள் என்று சொல்வதாயின் எந்த அளவுக்கு ஊழல் செய்தது எப்போது செய்தது என்பதனை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த ஊழல்வாதி யார் என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் நாங்களும் இந்த விடயம் தொடர்பாக கதைப்போமானால் ஊழல்வாதிகள் யார் என்பது எமக்கு தெரியும் சாணக்கியன் அவர்கள் இது தொடர்பாக மௌனமாக இருப்பது நல்லம்.
ஏனெனில் அவர் ஒவ்வொரு கட்சிகள் மீதும் பழியை சுமத்தி கொண்டு இப்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மீதும் தலைவர் மீதும் பழி சுமத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த காரியாலயத்தினை வைத்துக் கொண்டு நாங்கள் எங்களால் முடிந்த விடயங்களை செய்து கொண்டு வருகின்றோம் எமது காரியாலயம் இருக்கும் அதை வீதியிலே அவருடைய அலுவலகம் இருக்கின்றது.
அங்கு மக்கள் செல்வதில்லை. அங்கு செல்பவர்கள் எங்களிடமே வருகின்றனர் அவர்களுக்கு எங்களால் முடிந்த தேவைகளை நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம்.
1994 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் வைத்துக் கொண்டு தலைவர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரிணை வைத்தார் நியமித்து அன்றிலிருந்து இன்று வரை பல்வேறுபட்ட வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றார்.
சாணக்கியன் அவரது வாயை கட்டுப்படுத்த வேண்டும் அவரது ஊழல்களை நாங்கள் கதைக்க போனால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும்.
ஆகவே கட்சியுடன் சேர்ந்து கொண்டு தேவையில்லாத பேச்சுக்களையும் அனாகரியமான முறையில் கச்சேரி கூட்டங்களில் நடந்து கொள்வதையும் நாங்கள் ஊடக வழியாக பார்க்கின்றோம் அவ்வாறு ஒரு அரசியல் நாகரிகம் தெரியாதவர் எங்களை பார்த்து கதைப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.
கடல் தொழில் அமைச்சின் ஊடாக பல்வேறுப்பட்ட வேலை திட்டங்களை நாம் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றோம் அவற்றை நாங்கள் படம் போட்டு காட்ட வேண்டியது இல்லை.
சாணக்கியன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்ளஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகவே நாங்களும் அரசோடு இணைந்து மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு விரும்ப வேண்டும் எதிர் தரப்பு அரசியல் செய்து எந்த லாபமும் வரப்போவதில்லை.
சாணக்கியன் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்த மக்களுக்கான சேவையை அவர் செய்ய வேண்டும் அதை விடுத்து அடுத்தவர்கள் மீது சேர் பூசுவதும் அவர்களை இழுப்பதும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கவனமாக பேசவேண்டும்.
அவர் நினைக்கின்றார் எல்லா இடத்திலும் வேட்டியை வீசி இழுக்கலாம் என்று ஆனால் அவர் கடைசியில் வீசி இருப்பது சூரை பத்தையின் மீது ஆகவே அவர் கவனமாகத்தான் இழுக்க வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த. சிவானந்தராஜா தெரிவித்தார்.