வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த உணவகம்


வவுனியா நகரில் உணவகம் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளது.

வவுனியா நகரில் கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த லக்சனா உணவகம் இன்று (19.07) இரவு 8.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த உணவகத்தில் கடமையாற்றுபவர் இதனை அவதானித்த நிலையில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கிய நிலையில் அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்த போதும் உணவகம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது. இவ் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *