லொறி மோதியதில் இளம் குடும்பஸ்த்தர் பலி
துவிச்சக்கரவண்டி மீது லொறி மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் திருகோணமலை – புல்மோட்டை வீதியில் சலப்பையாறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது.
பொலன்னறுவையிலிருந்து ஹாட்வயார் பொருட்களை ஏற்றி வந்த லொறி துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விபத்தின் போது சலப்பையாறு- இரணைக்கேணி இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வந்த கைலாயபிள்ளை பஞ்சலிங்கம் (46வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.