24 மணிநேரத்தில் இரு மரணங்கள் – தீவிரமடையும் நிலைமை
கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53,700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.