கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து
கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்பொருள் விற்பனை பொருட்கள் நீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்து இன்றிரவு (17-07-2023) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தீ விபத்து பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீ விபத்து கட்டுபாட்டு பிரிவினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கிளிநொச்சி டிப்போ வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்பொருள் விற்பனை நிலையத்தின் களஞ்சிய பகுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஏற்பட்ட சேதவிபரம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.