யாழ் நாவாந்துறையில் கோஷ்டி மோதல் – சிலர் காயம், பெரும் பதற்றம்
யாழ்.நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இன்றையதினம் வன்முறை உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பிரதேச செயலருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது.