காதலியை வீட்டுக்குள் நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்
தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளார்.
யுவதியை உதைத்து காயப்படுத்திய கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.