கிளிநொச்சியில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியைச்ச சேர்ந்த உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், கப் வாகனத்தின் சாரதியை கைது செய்து, இன்று நீதிமன்றில் முன்னிறுத்தினர்.
குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related Post

யாழில் தீப்பந்த போராட்டம்
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் [...]

நாடு முழுவதும் மக்கள் போராட்டம் – பிரதான வீதிகள் முடங்கின
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம், வரிசையில் காத்திருக்கும் நிலை ஆகியவற்றை கண்டித்து [...]

இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி [...]