தென்கொரியாவில் சீரற்ற வானிலை – 35 க்கும் அதிகமானோர் பலி
தென்கொரியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 35 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பேருந்துகள், மகிழுந்து உள்ளிட்டவற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் ஏற்படும் பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்து 400 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.
தென்கொரியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.