யாழில் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு கனடா வாழ்க்கையை இளந்த யுவதி
யாழ் யுவதி ஒருவர் வெள்ளைத் தோலின் மீது கொண்ட அதிக மோகத்தால் தன் சருமத்தை ஒரு வாரத்தில் வெள்ளையாக மாற்றுவதற்கு ஆசைப்பட்டுள்ளார்.
அதனால் யாழ் நெல்லியடியை சேர்ந்த 23 வயது யுவதி கடந்த சில மாதங்களாக கிரீம் ஒன்றை பாவித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் அவரின் அழகை டிஃட்டோக்ல் பார்த்து மயங்கிய கனடா மாப்பிள்ளை இவ் யுவதியை திருமணம் செய்வதற்காக agency ஊடாக குறித்த யுவதிக்கு விசா ஏற்பாடு செய்துள்ளார்.
பின்னர் அனைத்தும் கை கூடி வந்த நிலையில் கை ரேகை பதிவிற்காக குறித்த யுவதி கனடா தூதரகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு கைரேகையை பதிவு செய்யும் போது கைரேகை தெளிவின்மையாக காணப்பட்ட காரணத்தால் யுவதி இறுதி நிமிடத்தில் திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
மேலும் கைரேகை தெளிவின்மையின் காரணத்தை ஆராய்ந்த போது நீண்ட நாட்களாக பாவித்து வந்த கிரீமே அனைத்திற்கும் காரணம் என தெரிய வந்துள்ளது.