யாழ் தீவகத்தில் 4ம் வகுப்பு மாணவிக்கு அதிபர் செய்த கொடூரம் – சொல்லகூடாது என மிரட்டல்
யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில் 4 வகுப்பு மாணவியின் முதுகில் தழும்பு ஏற்படும் அளவுக்கு அதிபர் அடித்துள்ள நிலையில் சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வேலணை பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தமது உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.