குளவி கொட்டுக்கு இலக்காகி 45 மாணவர்கள் வைத்தியசாலையில்
பொலன்னறுவையில் பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பொலன்னறுவை ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகத்தில் இன்று முற்பகல் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 45 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.