மன்னாரில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் மீது தாக்குல் – மூவர் படுகாயம்
உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரம் பயணித்த வீதியில் தடைகளை ஏற்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் வெள்ளாங்குளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.