22 வயதான யுவதி உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்


இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் தனது காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த 22 வயதான யுவதி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கஹவத்தை சட்ட வைத்திய அதிகாரி எம்.டி.எம்.எஸ்.கே. திஸாநாயக்க யுவதியின் உடலுறுப்புகள் மேலதிக பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என நேற்றைய தினம் அறிவித்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

இறக்குவானையைச் சேர்ந்த பிரதீபா என்ற இந்த யுவதியின் மர்ம மரணம் தொடர்பில் இறக்குவானை பதில் நீதிவான் சரத் விஜயகுணவர்தனவின் உத்தரவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *