யாழ் கொடிகாமத்தில் மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி
தனது நண்பனை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய இளைஞனின் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கொடிகாமம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி – தேவரையாளி பகுதியை சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த நண்பனை அவரது வீட்டில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வடமராட்சியில் உள்ள தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.