முல்லைத்தீவு கொக்கிளாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்கொளாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்றது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள்,பொலிஸார்,விசேட அதிரடிபடையினர்,சோகோ பொலிஸார்,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இது வரை பெண்கள் என அடையாளப்படுத்தக்கூடிய மூன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சட்டத்தரணி சுமந்திரன்,பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி நிரஞ்சன்,சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஸன் மற்றும் முன்னால் மாகண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

மீன் சாப்பிட்டதால் பறிபோன இரு உயிர்கள்
மட்டக்களப்பு, மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் [...]

பாலர் முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
நவாலி வடக்கு சனசமுக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் பாலர் முன்பள்ளி விளையாட்டு [...]

ஒன்றாக மதுபானம் அருந்திய கணவன் மனைவி – மனைவியை கொன்ற கணவன்
ஒன்றாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த கணவன் – மனைவி இடையே உருவான வாய்த்தர்க்கம் [...]