இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தயாரிப்பாளர்


கேரள மாநிலம் மலப்புரம் கீழபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகிர், (வயது 46). இவர் ஒரு இளம்பெண்ணிடம் சினிமா தயாரிப்பாளர் எனவும், சினிமா படம் எடுக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இதனை நம்பிய அந்த இளம்பெண், ஷாகிர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.27 இலட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி படத்தில் எதுவும் அந்த இளம்பெண்ணை நடிக்க வைக்கவில்லை.

இது குறித்து அவர், ஷாகிரிடம் கேட்டுள்ளார். அப்போது நிதி பிரச்சினை காரணமாக படம் எடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறி இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண், தான் கொடுத்த ரூ.27 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் தயாரிப்பாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.

ஆகவே தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்தது, மற்றும் செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து பொலிஸில் அந்த இளம்பெண் முறைப்பாடு செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய பொலிஸார், சினிமா தயாரிப்பாளர் ஷாகிரை தேடி வந்தனர். அவர் கோழிக்கோட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொலிசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மோசடி தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *