வவுனியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு
வவுனியா மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் வீதியில் வீடொன்று தீப் பிடித்து எரிந்துள்ளது.
இந்த வீடு எரிந்து கொண்டிருப்பதை கண்ட அயலவர்களும், பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, திடீரென இடம்பெற்ற தீப்பரவல் வீடு முழுவதும் பரவியுள்ளது.
அதனையடுத்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.