யாழில் போட்டி போட்டு ஓடிய பேரூந்து – இளைஞர் வைத்தியசாலையில்
யாழில் இ.போ.ச பேரூந்துடன் போட்டி போட்டு ஓடிய தனியார் பேரூந்தில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து பலாலி வீதி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேரூந்தினை தனியார் பேரூந்து முந்தி செல்வதற்கு முற்பட்ட வேளையிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேரூந்தின் வேகம் காரணமாக பேரூந்தில் பயணித்த இளைஞர் தவறுதலாக கீழே விழுந்தமையால் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைகளிற்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.