3 சிறுமிகள் தலைமறைவு – தேடுதல் தீவிரம்
தடுத்துவைப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறுமிகள் மூவர், அந்த முகாமில் இருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மடாட்டுகம நகருக்கு அண்மையில் உள்ள தடுப்பு முகாமில் இருந்தே, 15,16 மற்றும் 17 வயதான சிறுமிகள் தப்பியோடியுள்ளனர்.
அந்த மூவரும் கனேன்பிந்துவ, நொச்சியாகம மற்றும் தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த மூன்று சிறுமிகளும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்படி தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.