5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு அபாயம் காணப்பட்டால் அப்பகுதியிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.