நிம்மதி இழந்த தந்தை – 4 வயது மகன் எடுத்த காணொளியால் பரபரப்பு

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

இந்தியாவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா, ஆந்திரா கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஷேக் ஜமால் தனது 3 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். அவரின் மனைவி குவைத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

ஷேக் ஜமால் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன்பு அவரின் தந்தை மாதர் சாஹேப் உயிரிழந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேக் ஜமால் தனது மகனை அழைத்து, தான் தூக்கில் தொங்குவதை செல்போனில் படமாக்கும் படி கூறியுள்ளார்.

தந்தை கூறியபடியே 4 வயது மகனும் தந்தை தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்ல, வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்