வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலி
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 7 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
டெக்ஸாஸின் பிரபல வணிக வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.