வைத்தியசாலையில் 24 வயது இளைஞன் குத்தி கொலை
அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
இன்று அதிகாலை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த விடுதிக்குள் வந்த ஒருவர் இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.