இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கை
இலங்கையில் வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சூரியன் உச்சம் கொடுப்பதால், அதன் பின்னர் காலநிலை மேலும் வெப்பமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
அனல் காற்றின் காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
பருவமழை ஆரம்பமாகி மார்ச் நடுப்பகுதியில் நின்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், மழைக்கான அறிகுறிகள் ஏதுமின்றி ஏப்ரல் நடுப்பகுதியில் மழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் கூறினார்.
இதனால், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் மாற்றங்களை கொண்டு வரும் கணிசமான மழைபொழிவை அனுபவிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், இடையில் சிறிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்த அவர், இருப்பினும், தற்போதுள்ள வெப்பமான காலநிலை மறைவதற்கு இது போதுமானதாக இருக்காது, என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை அடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும் , அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது என்றும் வானிலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர்.சிரோமணி ஜெயவர்தன தெரிவித்தார்.
அதேசமயம் “ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான காலநிலையாக இருப்பது இயல்பானது எனினும், சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்த்து , முடிந்தவரை நிழலில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.