நாட்டிற்கும் பெருமை சேர்த்த முல்லைத்தீவு யுவதி

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்
ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Related Post

இலங்கை அணியில் இருந்து இருவர் மாயம்
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்நாட்டில் இருந்து சென்ற [...]

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி – தெல்லிப்பழை மஹாஜனா 2ம் இடம்
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை [...]

வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது. [...]