நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
கண்டி பொல்கொல்ல அணைக்கு அருகில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நான்கு பாடசாலை மாணவர்கள் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு கீழே சுமார் 300 மீற்றர் தூரத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்ததாகவும் அவர்களில் இருவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நீரில் மூழ்கிய இரு மாணவர்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டதுடன், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி, தித்தவெல வீதி பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மற்றைய மாணவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.