வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தின் உயிரிழந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று குறித்த குடும்பஸ்தர் தண்டுவானில் இருந்து முள்ளியளை நோக்கி உந்துருளியில் இரவு 10.00 மணியளவில் பயணித்துள்ளார்.

களிக்காட்டுப்பகுதியில் உந்துருளி வேகமாக சென்று பாலத்தில் மோதிவிட்டு வயல்கம்பிக்கட்டையில் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடலத்தில் இருந்து சுமார் 8 மீற்றர் தொலையில் வயலுக்குள் உந்துருளி பாய்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த குடும்பஸ்தர் இரவு வேளை ஆட்கள் நடமாட்டம் குறைவான வீதியாக காணப்பட்டுள்ளதால் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொசார் தெரிவித்துள்ளார்கள்.