யாழ் கீரிமலையில் ஆலய குருக்கள் வீட்டில் 30 லட்சம் ரூபாய் திருட்டு
யாழ்.கீரிமலை நகுலேஷ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது.
ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தவேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார்.
அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் இறங்கிய கும்பல் ஒன்று குருக்கள் வீட்டில் இருந்த பணத்தினை திருடி சென்றுள்ளது.
குருக்கள் கொழும்பில் இருந்து இன்றைய தினம் வீடு திரும்பிய போதே வீட்டின் கூரை பிரித்து வீட்டில் இருந்த ஆலய பணம் திருடப்பட்ட விடயத்தினை அறிந்துள்ளார்.
அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.